சமீபத்தில் வருண்மணியனுடன் திருமண நிச்சயதார்த்ததை முறித்து கொண்ட நடிகை த்ரிஷாவுக்கு தற்போது கோலிவுட்டில் வாய்ப்புகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது.
சுந்தர் சி தான் அடுத்து இயக்கவிருக்கும் ‘அரண்மனை 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் அரணமனை முதல் பாகத்தில் பேயாக நடித்த ஹன்சிகாவும் இந்த படத்தில் மீண்டும் பேயாக தோன்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹன்சிகாவும் த்ரிஷாவும் நல்ல தோழியாக இருந்தபோதிலும், இதுவரை ஒரு படத்தில்கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக அதுவும் பேயாக தோன்றி த்ரிஷாவை பயமுறுத்தும் கேரக்டரில் ஹன்சிகா நடிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவை தீவிரமாக காதலித்து வந்த ஹன்சிகா கடந்த சில மாதங்களுக்கு பின்னர் பிரேக் அப் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தொழிலதிபர் வருண்மணியனை தீவிரமாக காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பிரேக் அப் ஆனவர் த்ரிஷா என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு பிரேக் அப் ஆன நடிகைகள் நடித்து வரும் அரண்மனை வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.