ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டி.ராஜேந்தரின் லட்சிய திமுகவும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் களத்தில் குதிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் டி.ராஜேந்தரின் லட்சிய திமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அவருடைய சகோதரர் வாசு என்பவர் இன்று ஸ்ரீரங்கம் வந்து வேட்புமனு வாங்கிச்சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஸ்ரீரங்கத்திற்கு வரும் 27ஆம் தேதி டி.ராஜேந்தர் வருகை தர இருப்பதாகவும், அன்றையை தினம் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு அன்றே வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று லட்சிய திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.