மீண்டும் தள்ளிப்போகிறதா என்னை அறிந்தால்? பரபரப்பு தகவல்

yennai arindhaalஅஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனதற்கு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான காரணங்கள் கற்பனையானவை என்பதை படிக்கும்போதே தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் இன்று காலை முதல் அதே சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஒரு புரளியை கிளப்பியுள்ளனர். ‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29ஆம் தேதியும் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும், பிப்ரவரி 2வது வாரத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காரணம் இதுதானாம். ஹாரீஸ் ஜெயராஜ் ஒரே நேரத்தில் அனேகன், என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களுக்கும் பின்னணி இசை அமைத்துக்கொண்டிருப்பதால் எந்த படத்திற்கு முதலில் வேலை பார்ப்பது என்று குழப்பத்தில் இருப்பதாகவும், அதனால் பாதி நேரம் அனேகனுக்கும், பாதி நேரம் என்னை அறிந்தால் படத்திற்கும் பணிபுரிந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்திற்கு மட்டுமே முழு நேரமும் ஒதுக்கி பணிபுரிந்தால் மட்டுமே ஜனவரி 29ஆம் தேதிக்கு சொன்னபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியும். ஆனால் அனேகன் படத்தின் பணியை முடிக்கும்படி தனுஷ், ஹாரீஸ் ஜெயராஜை நெருக்குவதால்தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். தனுஷின் நெருக்கடி காரணமாக ஹாரீஸ் ‘என்னை அறிந்தால்’ படத்தை தாமதப்படுத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.  ஆனால் அஜீத் இதுகுறித்து எவ்வித கவலையும் இன்றி சிறுத்தை சிவாவுடன் அடுத்த படம் குறித்து சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply