ஐஸ்வர்யம் தரும் விரதம்…

sriyantra meru2பிறருக்கு உதவ நமக்கு செல்வம் தேவை. அதற்காக நாம் ஐஸ்வர்யக் கோல பூஜை செய்து பயனடையலாம். ஐஸ்வர்யக் 

கோலம் என்பது செல்வத்தை அளிக்கும் கோலம் மட்டுமல்ல.அது கோலம் என்பதையும் தாண்டி ஸ்ரீசக்கரம் போன்ற ஒரு எந்திரம்! அதில் பல அற்புதமான தத்துவங்கள் அடங்கியுள்ளன.

“ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வை- அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உன்னதமான வாழ்க்கையை உனக்குத் தருவேன்’ என்று சக்தி தேவியே கூறும் வகையில் அமைந்துள்ளது ஐஸ்வர்யக் கோலம். பூஜையறையில் அல்லது வேறு எந்த இடத்திலும் ஐஸ்வர்யக் கோலப் படத்தை மாட்டி வைத்து, அதன்முன் நெய் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும்.

பௌர்ணமியில் வேண்டுதலைத் துவக்கி, அமாவாசை, அடுத்த பௌர்ணமி, மீண்டும் அடுத்த அமாவாசைக்கு முதல் நாளன்று வேண்டுதலை முடிக்கும்பொழுது 45 நாட்கள் ஆகிவிடும். வேண்டுதல் முடிந்த மறுநாள் முதல் தேய்பிறைபோல நம்முடைய பிரச்சினைகள் மறையத் துவங்கும்.

பௌர்ணமியன்று நம் பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து, அந்தக் காகிதத்தினால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, சாமி பீடத்தில் ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி, ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் அதைக் காட்டிவிட்டு (கற்பூர தீபாராதனை போல) சாமியறையில் வைத்துவிட வேண்டும்.

ஹாலில் மாட்டப்பட்ட படத்திற்கும் அதைச் செய்யலாம். பிறகு நமக்குத் தெரிந்த லட்சுமி அஷ்டோத்திரம் போன்ற ஏதாவது ஒரு துதியைச் சொல்லி நம்மாலியன்ற ஒரு சிறிய நிவேதனத்தைச் செய்யலாம். தொடர்ந்து 45 நாட்களும் இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள காகிதத்தால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, நெய் விளக்கை ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் காட்டிவிட்டு வைத்து விடவேண்டும்.

அசௌகர்ய நாட்களிலும் முடியாத தினங்களிலும் வீட்டிலுள்ள வேறு எவர் வேண்டுமானாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆலயத்தில் அர்ச்சகர்கள் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போன்றதே இதுவும். அட்சய திரிதியையன்று இப்பூஜையை செய்வது மிகவும் விசேஷம். அன்று மட்டுமோ அல்லது அன்றிலிருந்து தொடர்ந்து 45 நாட்களுக்குமோ செய்யலாம்.

Leave a Reply