பாகிஸ்தான் தர்காவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு. ஐ.எஸ்.ஐ. பொறுப்பேற்றது

பாகிஸ்தான் தர்காவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு. ஐ.எஸ்.ஐ. பொறுப்பேற்றது

பாகிஸ்தான் நாட்டில் குண்டுவெடிப்பு என்பது அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்ட நிலையில் நேற்று அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிந்து மாகாணத்தின் லால் ஷாபாஷ் குலந்தர் என்ற புகழ்பெற்ற தர்காவில் மர்ம நபர்கள் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பின்போது அங்கு வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்கள் உள்பட 72 பேர் உடல்சிதறி பலியாகினர். 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் லால் ஷாபாஷ் குலந்தர் தர்கா குண்டுவெடிப்பிற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply