ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி – மும்பை ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி – மும்பை ஆட்டம் டிரா

footballகடந்த சிலநாட்களாக 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டி ஒன்றில் டெல்லி டைனமோஸ் அணி, மும்பை சிட்டி எப்.சி. அணியுஅன் மோதியது.. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாகமாக விளையாடியபோதால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தின் 33-வது மற்றும் 39-வது நிமிடங்களில் மும்பை வீரர் கிரிஸ்டியன் வாடோக்ஸ் (ஹங்கேரி) அடுத்தடுத்து கோல் அடித்து அமர்க்களப்படுத்தினாலும், 51-வது நிமிடத்தில் டெல்லி வீரர் ரிச்சர்ட் காட்ஸியும், இதைத் தொடர்ந்து 76-வது நிமிடத்தில் டெல்லி அணியின் மாற்று ஆட்டக்காரர் பதாரா பாட்ஜியும் 69-வது நிமிடத்தில் சோனி நோர்டேயும் 82-வது நிமிடத்தில் மார்செலோ பெரீராவும் கோல்கள் அடிக்க இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த சீசனில் தொடர்ந்து டிரா ஆன 4-வது ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஓய்வு நாள் என்பதால் போட்டிகள் இல்லை. நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.

Leave a Reply