12 ராணுவ வீரர்களின் தலையை துண்டித்து சாலையில் வீசிய
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் கடந்த 2011ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் முகமது கடாபி கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த நாட்டிலும் தங்கள் கட்டுப்பட்டில் வைத்துள்ளனர். இங்கு ஒருசில முக்கிய பகுதிகள் இன்னும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லிபியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சபரதா என்ற நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ராணுவ அதிகாரிகள் மற்றும் சில ராணுவ வீரர்கள் சிறை பிடித்தனர். இவர்களை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியபோது தீவிரவாதிகள் பின்வாங்கினார்கள். ஆனால் தங்கள் வசம் பிடிபட்ட ராணுவ வீரர்களை அவர்கள் விடுவிக்கவில்லை.
அதுமட்டுமின்றி தங்கள் பிடியில் இருந்த 12 ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்து அவர்களுடைய பிணங்களை சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ராணுவம் அவர்களுடைய பிணங்களையும் தலைகளையும் மீட்டு உரியவர்களிடம் சமர்ப்பிக்கும் பணியை செய்து வருகிறது
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூர செயலுக்கு லிபியா அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.