ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்னும் 72 மணி நேரத்தில் $200 மில்லியன் பணயத்தொகையாக தரவில்லை எனில் தங்களிடம் சிக்கியுள்ள இரண்டு ஜப்பானியர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த 42 வயது யுகாவா மற்றும் 41 வயது கேஞ்சி ஜோகோ ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பணயக்கைதிகளாக சிக்கினர். இந்நிலையில் நேற்று தீவிரவாதிகளிடம் இருந்து இன்று வெளிவந்துள்ள எச்சரிக்கை வீடியோ ஒன்றில், ‘இன்னும் 72 மணி நேரத்தில் @200 மில்லியன் டாலர் பணயத்தொகையை கொடுக்காவிட்டால் இன்னொரு கழுத்தறுக்கப்படும் வீடியோவை அனைவரும் பார்க்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த வீடியோவில் பேசிய தீவிரவாதிதான் ஏற்கனவே அமெரிக்கர் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் என்று கூறப்படுகிறது.