4 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். திடுக்கிடும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

4 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். திடுக்கிடும் வீடியோ வெளியானதால் பரபரப்பு
[carousel ids=”70913,70914,70915,70916,70917,70918,70919,70920,70921″] ஈராக், மற்றும் சிரியா நாடுகளின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பட்டில் வைத்து கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த பகுதிகளில் தங்களுக்கென ஒரு சட்டத்தை வகுத்துக்கொண்டு, அந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனையை அளித்து வருகின்றனர்.

கத்தியால் கழுத்தை அறுப்பது, உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி எரிவது, கல்லால் அடித்து கொல்வது உள்பட பல தண்டனைகள் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் 4 பேர்களை உயிருடன் எரித்து கொடுமையாக கொலை செய்து அந்த வீடியோவை தங்கள் இணையதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேர்களை இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி  வீடியோ ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அந்த விடியோவில் தோன்றும் முகமூடி அணிந்த தீவிரவாதி ” ஈராக் அரசு படையினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை உயிருடன் கொளுத்தி கொலை செய்ததற்கு பழி வாங்கவே இப்போது 4 பேர் எரித்துக் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், இந்த வீடியோவானது தலைநகர் பாக்தாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள ருட்பா நகரில் எடுக்கப்பட்டதாக வீடியோவில் தோன்றும் தீவிரவாதி தெரிவித்துள்ளான்.

Leave a Reply