பிரதமர், ஜனாதிபதி வீடுகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமா? பரபரப்பு தகவல்

பிரதமர், ஜனாதிபதி வீடுகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமா? பரபரப்பு தகவல்
pm
டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மாளிகைகள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு, ராஜபாதை, இந்தியா, கேட், சி.பி.ஐ., மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை தலைவர்கள் அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ள மத்திய அரசு அலுவலக வளாகம் (சிஜிஓ வளாகம்) ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த இடங்களில் யு.ஏ.எஸ். என்னும் ஆளில்லாத வான் தாக்குதல் அமைப்பு, ஆளில்லா விமானம், பாராமோட்டார் ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தலாம் எனவும், எனவே, சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் விண்ணில் பறந்தால், அவற்றை இந்திய விமானப்படையின் ஆலோசனை பெற்று உடனே சுட்டுத்தள்ளுமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாக காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் அடுத்த குறி இந்தியா என்றும் டெல்லியில் பிரதமர் வீடு உள்பட 15 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply