திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஒரு ஜோடியை பொது இடத்தில் கல்லால் எறிந்து கொலை செய்யும் மரண தண்டனை ஒன்று ஈராக் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தினர் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறாது.
ஈராக் நாட்டில் உள்ள மோசூல் என்ற நகரை சேர்ந்த ஒரு இளம்ஜோடி திருமணத்திற்கு முன்னரே உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் நீதிமன்றம் மரண தண்டனை நடந்தது. இந்த தண்டனை நேற்று மோசூல் நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. மைதானத்தின் நிற்க வைக்கப்பட்ட அந்த ஜோடியை சுற்றிலும் நின்றிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் கல்லால் எறிந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த ஜோடி மரணம் அடையும் வரை கல்லால் எறிந்து அதன்பின்னர் அவர்களின் உடல்களை தீவிரவாதிகள் அப்புறப்படுத்தினர்.
பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை மிகவும் காட்டு மிராண்டித்தனமானது என உலகெங்கிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.