ரஷ்ய ராணுவத்தை திணறடித்த ஆணுறை வெடிகுண்டு. அதிர்ச்சி வீடியோ

ரஷ்ய ராணுவத்தை திணறடித்த ஆணுறை வெடிகுண்டு.
condom bomb
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க தற்போது ரஷ்ய ராணுவம் நேரடியாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் புது டெக்னிக்கை பயன்படுத்தி வருகின்றனர். ஆணுறை போன்ற பலூன்களை செய்து அதில் வெடிகுண்டு இணைத்து பறக்க விடுவதாகவும், அந்த பலூன் குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் வெடித்து சிதறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆணுறை தாக்குதலால் ரஷ்ய ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில்,  ஐ.எஸ் தீவிரவாதிகள்,  ரஷ்யாவின்  விமான தாக்குதலை சமாளிக்க வித்தியாசமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்யாவின் விமானங்களை அழிக்க அவர்கள் ஆணுறைகளில்  வெடிகுண்டை வைத்து  பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்த விபரங்கள் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்து உள்ளது.

அந்த வீடியோவில் சில தீவிரவாதிகள் ஆணுறைகளில் வெடிகுண்டுகளை வைத்து பறக்கவிடுகின்றனர். மேலே பறந்து செல்லும் இந்த வெடிகுண்டுகள் ரஷ்ய விமானங்களையோ அல்லது குறிப்பிட்ட இலக்குகளையோ தாக்குகின்றன.  இத்தகைய வெடிகுண்டுகள் சிரியாவின் இடிலிப் நகரில் பயன்படுத்தப்படுவதாகவும், இத்தகைய பதில் தாக்குதலை சமாளிக்க ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=YRrnYUqZfFQ#t=80

Leave a Reply