பாரீஸுக்கு அடுத்த குறி வாஷிங்டன். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

பாரீஸுக்கு அடுத்த குறி வாஷிங்டன். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்
isis
கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ள அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் பாரீஸில் நடந்த தாக்குதலை போல விரைவில் வாஷிங்டன் நகரில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல நாடுகள் ஆதரித்து வரும் நிலையில் பிரான்ஸ், அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளையும் மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் “சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் கொடூரமான தாக்குதலில் பங்கேற்கும் நாடுகளே, கடவுளின் ஆணைப்படி பிரான்சின் மையப்பகுதியான பாரீஸ் நகரை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனையும் விரைவில் தாக்குவோம்” என்று ஒரு ஐ.எஸ் தீவிரவாதி கூறுவதுபோல் அந்த வீடியோ உள்ளது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary: ISIS vows all nations in Syria air strikes ‘will suffer France’s fate’ in video

https://www.youtube.com/watch?v=CAQhCO7ZUj0

Leave a Reply