துருக்கி ராணுவ வீரர்களை உயிருடன் எரித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்
சமீபத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் துருக்கி ராணுவ வீரர்கள் இருவரை பணயக்கைதியாக பிடித்து உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்புடன் வெளிவந்துள்ளது.
இரண்டு துருக்கி வீரர்களையும் சங்கிலியால் கட்டி ஒரு கூண்டில் அடைத்த தீவிரவதிகள் பின்னர் மண்டியிட்டவாறு நிற்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்களை உயிருடன் எரித்துக் கொல்லப்படும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துருக்கியில் இந்த வீடியோ வன்முறை அபாயம் ஏற்பட்டதால், சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜார்டானை சேர்ந்த விமானியை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இதே முறையில் எரித்துக் கொன்றனர்.