ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவன தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவன தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

facebookஉலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே ஆகிய இருவருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.க்கு எதிரான போரில் பேஸ்புக்கும், டுவிட்டரும்  இணைந்து கொள்வதாக சமீபத்தில் அறிவித்தன. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு அதை செயலிலும் இந்த இரு நிறுவனங்கள் காட்டின. இதனால் தகவல் தொடர்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தற்போது இந்த இரு நிறுவனங்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளது.

டுவிட்டர் நிறுவனம் மட்டும் சுமார் 1.25 லட்சம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் அதேபோல் ஃபேஸ்புக்கும் லட்சக்கணக்கான தீவிரவாதிகளின் கணக்கை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சே படங்கள் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளது போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. 25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சேக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் தலைவர்கள் மட்டுமின்றி அதன் ஊழியர்களும் தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply