பெங்களூரு இஸ்கான் கோயில் உலகப்புகழ் பெற்றது என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த இஸ்கான் கோயில் அக்டோபர் 5 முதல் திறக்கப்பட உள்ளது
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் மாஸ்க் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் உள்பட ஒரு சில நிபந்தனைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆறு மாதங்களுக்கு பின் இஸ்கான் கோவில் திறக்கப்படவுள்ளதால் பக்தர்கள் பரவசத்தில் உள்ளனர்.