ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிபோட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவா அணி முதல் அணியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.,
இந்நிலையில் இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சென்னை 3-0 என்ற கோல்கணக்கில் கொல்கத்தாவை வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி இறுதிக்கு தகுதி பெற நான்கு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் சென்னை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவின் இந்த போட்டி நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜெயாமேக்ஸ் தொலைக்காட்சிகள் இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன.