ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா, எப்.சி. கோவா, டெல்லி டைனமோஸ் ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.
அரை இறுதியில் நுழையப் போகும் 4–வது அணி எது? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேரளா பிளாஸ்டர்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. அரை இறுதியில் எஞ்சிய ஒரு இடத்தை பிடிக்க கவுகாத்தி, சென்னை, புனே அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், யுனைடெட் நார்த் ஈஸ்ட் மற்றும் புனே எப்ஃசி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கவுகாத்தி இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்றது.
நார்த் ஈஸ்ட் அணியின் நிக்கோலஸ் ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து 6-வது நிமிடத்தில் புனே அணியின் ஜேம்ஸ் பெய்லி கோல் அடித்தார். பின்னர் நார்த் ஈஸ்ட் அணியின் கமரா 18-வது நிமிடத்திலும், ஆண்ட்ரி முட்டு மற்றும் அட்ரியன் பைக்கி கோல் அடித்தனர். இறுதியில் புனே அணியின் ஆண்டிரியன் முட்டு 86-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் நார்த் ஈஸ்ட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் நார்த் ஈஸ்ட் அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. தோல்வி கண்ட புனே அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இந்நிலையில் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள புனே மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.