ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது மும்பை
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தற்போது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய மும்பை அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மும்பையில் நேற்று நடந்த இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே மும்பை அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 32வது நிமிடத்திலும், 60வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்ட மும்பை அணியினர் சென்னை வீரர்களை திணறடித்தனர். கடைசி வரை சென்னை அணியால் பதில் கோல் போட முடியவில்லை
இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை வெற்றி பெற்றது. இதன் மூலம் 22 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மும்பை சிட்டி, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.