ஐ.எஸ்.எல். கால்பந்து: அணிகளின் தற்போதைய புள்ளிகள் எவ்வளவு?
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிலையில் தற்போதைய அணிகளின் புள்ளி விபரங்களை பார்ப்போம். கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள், மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா – நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. ஆகியவை மோதும் இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அணிகள் புள்ளிகள்
பெங்களூரு 40
சென்னை 32
புனே 30
கோவா 27
ஜாம்ஷெட்பூர் 26
கேரளா 25
மும்பை 23
டெல்லி 19
ATK 13
வடகிழக்கு யூனிடெட் 11
பெங்களூரு, சென்னை, புனே அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
நாளை நடைபெறும் ஜேம்ஷெட்பூர் எப்.சி. – எப்.சி. கோவா இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.
மற்றொரு போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா – நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.