ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: புனே அணியை வீழ்த்தி கோவா வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: புனே அணியை வீழ்த்தி கோவா வெற்றி

1ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆடத்தில் புனே அணியை கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கோவா அணி கடைசி இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறியுள்ளது. புனே அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புனேயில் நடந்த நேற்றைய போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான முறையில் விளையாடின. ஆட்டத்தின் 32 நிமிடத்தில் புனே வீரர் அகஸ்டின், கோவா வீரர் ஜோப்ரேவை பெனால்டி பாக்ஸ் அருகே கீழே தள்ள, கோவா அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட லூயிஸ், பந்தை சுழற்றிவிட்டு மிக அற்புதமாக கோலடித்தார்.

இந்த கோலுக்கு பதில் கோல் போட்டு சமன்படுத்த புனே அணி பெரும் முயற்சி மேற்கொண்டும் கடைசி வரை முடியவில்லை. எனவே இந்த போட்டியில் கோவா 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி, கேரளா அணிகள் மோதுகின்றன.

Leave a Reply