பிரான்ஸ் நாட்டை முழுவதும் அழிப்போம். ஐ.எஸ்.தீவிரவாதியின் வீடியோ மிரட்டல்

பிரான்ஸ் நாட்டை முழுவதும் அழிப்போம். ஐ.எஸ்.தீவிரவாதியின் வீடியோ மிரட்டல்

isisiகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகள் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி தற்போது அடையாளம் காணபட்டுள்ளார். அவரது பெயர் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜின் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்பு இந்த தீவிரவாதி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தீவிரவாதி பேசியுள்ளதாவது: ‘‘காலங்கள் மாறி விட்டது, எங்கள் சகோதர-சகோதரிகள் படும் வேதனையை நீங்களும் அனுபவிப்பீர்கள். உங்கள் நாட்டை நாங்கள் முழுவதும் அழிக்கப் போகிறோம்’ என தெரிவித்துள்ளான்.

மேலும், சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு படைகளை அனுப்பியுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கையில் கத்தியுடன் சென்று எதிர்படுவோரை எல்லாம் குத்திக் கொல்லுங்கள் என்றும் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் அந்த வீடியோவில் கூறியுள்ளான்.

Leave a Reply