அல்ஜீரா தொலைக்காட்சியை மூடுங்கள் இஸ்ரேல் அதிரடி உத்தரவு

அல்ஜீரா தொலைக்காட்சியை மூடுங்கள் இஸ்ரேல் அதிரடி உத்தரவு

ஜெருசலேம் நாட்டில் சமீபத்தில் நடந்த வன்முறைக்கு அல்ஜீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு செய்தியே முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில் உடனே இஸ்ரேலில் உள்ள அல்ஜீரா தொலைக்காட்சி மற்றும் அலுவலகத்தை மூட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்ஜசீரா இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றின் முக்கிய கருவியாக செயல்பட்டு வருவதாகவும், இஸ்ரேலின் அண்டை நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் அல்ஜசீரா தொலைகாட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மத தீவிரவாதத்தை தூண்டும் அல்ஜசீரா இஸ்ரேலிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடனடியாக அல்ஜசீரா தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்வதோடு கேபிள், சாட்டிலைட் தொடர்புகளையும் நீக்க வேண்டும் என்று இஸ்ரேல் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

Leave a Reply