இஸ்ரேல் நாட்டில் உள்ள பழமையான செசெரியா என்ற துறைமுகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் ஏராளமான தங்கம் இருப்பதை கண்டு அந்த கப்பலை கண்டுபிடித்த குழுவினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அரபுநாடுகளை ஆட்சி செய்த பாதிவித் கலிபக் என்ற அரசர் செசெரியா துறைமுகத்தில் இருந்து அனுப்பிய தங்கக்காசுகள் கொண்ட கப்பல் கடலில் மூழ்கியிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை ஒன்பது கிலோ தங்கக்காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிகளவிலான தங்கப்புதையல் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தங்கப்புதையலை கண்டுபிடித்த குழுவினர் இஸ்ரேல் அரசிடம் முறைப்படி தகவல் தெரிவித்ததாகவும், புதையலில் கிடைத்த தங்கம் முழுவதும் அரசுக்கு சொந்தம் என அரசு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.