ஓனரின் பின்னால் ஊர்ந்து வரும் ரோபோ சூட்கேஸ். இஸ்ரேல் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு

ஓனரின் பின்னால் ஊர்ந்து வரும் ரோபோ சூட்கேஸ். இஸ்ரேல் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு
suitcase2
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்பவர்களது ஒரே அசெளகரியம் பெரிய பெரிய சூட்கேசை தூக்கி கொண்டு செல்வதுதான். சக்கர சூட்கேஸ் தற்போது உபயோகிக்கப்பட்டு வந்தாலும் ஒருசில இடங்களில் அதையும் தூக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் சூட்கேசை தூக்காமலும், உருட்டி செல்லாமலும் நமது பின்னால் தானாகவே நகர்ந்து வரும் ரோபோ சூட்கேஸ் தயாராகியுள்ளது. மொபைல் கேமிராவின் மூலம் ஓனரின் பின்னால் தானாகவே நகரும் சூட்கேஸ் ஒன்றை இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தயார் செய்துள்ளது. இந்த வகை சூட்கேஸ்கள் தொலைந்துவிட்டாலும் உடனடியாக அந்த சூட்கேஸ் எங்கிருக்கின்றது என்பதை புளூடுத் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

Nua Robotics என்ற இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த சூட்கேஸ் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும், விரைவில் மார்க்கெட்டுக்கு இந்த சூட்கேஸ் விலைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=2EGPmuxnQbE

Chennai Today News: Israeli company creates robotic suitcase that follows owner and can be tracked on Smartphone

suitcase suitcase1  suitcase3

Leave a Reply