இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் வெற்றி. பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் வெற்றி. பிரதமர் வாழ்த்து

3இந்தியாவின் தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக இஸ்ரோ செலுத்திய 2,211 கிலோ எடை கொண்ட ‘இன்சாட்-3டிஆர்’ என்ற செயற்கைக் கோள் நேற்று வெற்றிகரமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் ஆரம்பித்தது முதல் விஞ்ஞானிகள் காலநிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், எரிபொருட்கள் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் ராக்கெட்டை செலுத்துவது 40 நிமிடங்கள தாமதம் ஆனது. சரியாக நேற்று மாலை 4.50 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டின் பாதையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக சற்று முன்னர் நிலைநிறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. உள்நாட்டில் தயாரான மூன்றாவது ஜிஎஸ்எல்வி மாக் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி மாக் 3 டிசம்பர் அல்லது ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்.டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை இஸ்ரோவே கணிக்கும் முறை விரைவில் வரும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் வெற்றி குறித்து பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘நமது நாட்டினரின் திறமையை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றதற்காக, இணையற்ற அர்ப்பணிப்புக்காக இந்த நேரத்தில் நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நமது செயற்கைகோள் திட்டங்களின் பின்பற்றத்தக்க சாதனைகள் நம்மை பெருமை கொள்ள செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply