இஸ்ரோவின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் சென்றது
இஸ்ரோ தலைவராக தமிழரான சிவன் பொறுப்பேற்றவுடன் விண்ணில் செலுத்தப்படும் இரண்டாவது செயற்கைக்கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தப்டி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்கைக்கோள் சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.