இஸ்ரேல் முன்னாள் பிரதமர் மரணம்

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் கமாண்டராக இருந்து பின்னர் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்ற முன்னாள் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷாரோன் நேற்று மரணமடைந்ஹர். அவருக்கு வயது 85. மரணம் அடைந்த ஷாரோன், எட்டு ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1928ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி இஸ்ரேலிய, கஃபார் மலால் என்ற இடத்தில் பிறந்த ஏரியல் ஷாரோன், 1981 முதல் 1983ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்தார். அதன்பின்னர் 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை பிரதமரமாக இருந்தார். இவர் 1953ஆம் மார்கலிட் ஷரோன் என்ற பெண்ணை 1962ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஏரியல் ஷாரோன் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு 2006ஆம் ஆண்டு  ஜனவரி 7 மற்றும் 14ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு சர்ஜரிகள் செய்யப்பட்டன. ஆனாலும் அவரது உடல்நிலை தேறவில்லை. 2006ஆம் ஆண்டு முதல் நேற்று மாலை மரணமடையும் வரையில் கோமா நிலையில்தான் இருந்தார்.

முன்னாள் இஸ்ரேல் பிரதமர் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஒபாமா உள்பட உலகின் பலநாட்டு தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply