இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 109
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
எலக்ட்ரானிக்ஸ் – 49
மெக்கானிக்கல் – 34
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 26
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2014-15 கல்வியாண்டில் படித்து முடித்து 30.09.15க்குள் சான்றிதழ் பெறுவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.100 இதனை 17.07.2015 தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.