ஆக்சிஜன் மூலம் ராக்கெட் ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

ஆக்சிஜன் மூலம் ராக்கெட் ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

isroஇதுவரை எரிபொருள் வைத்து ராக்கெட்டை செலுத்தி வந்த நிலையில் முதன்முதலாக ஆக்சிஜன் கொண்டு இயங்கும் ராக்கெட்டை இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றகரமாக சோதனை செய்தனர்.

ராக்கெட் ஏவப்பட்ட 55 நொடிகளில் சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்ததும் சக விஞ்ஞானிகள் உள்பட இஸ்ரோ ஏவுதளமே மகிழ்ச்சியில் திளைத்தது. இந்த வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வெற்றி குறித்து இஸ்ரோ விஞ்ஞானி சிவன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ராக்கெட் இன்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இதுவாகும்.

இந்த ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி அடைந்ததன் மூலம் இனி ராக்கெட் ஏவுவதற்கான செலவு 10 மடங்கு குறையும். பொதுவாக ராக்கெட்கள் ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை தாங்கிச் செல்லக் கூடியவை. ஆனால் இந்த ராக்கெட் இயந்திரம் வளிமண்டல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு அதன் மூலம் இயங்குவதால், ராக்கெட் எடை குறைவாக, அதே சமயம் திறன் அதிகம் கொண்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இத்தகைய ராக்கெட் என்ஜினை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே சோதனை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply