முழுக்க முழுக்க இந்திய தொழில்நூட்பத்தில் தயாரான ஜிசாட்-16 நாளை ஏவப்படும். இஸ்ரோ அறிவிப்பு.

gsat 16இந்தியாவின் ஜிசாட்-16 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. நாளை இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் பிரெஞ்சு கயானா பகுதியில் உள்ள உள்ள குரூ என்னும் இடத்தில் இருந்து ஜிசாட்-16 செயற்கைக்கோள் ஏவப்படும். இந்த தகவலை இஸ்ரோவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏரியன்ஸ்பேஸ் ஏவுகணையில் இந்தச் செயற்கைக்கோள் பொருத்தப்படும் என்றும், ஜிசாட்-16 செயற்கைக்கோள் இன்சாட்-3இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரானது.

Leave a Reply