இந்தியாவின் அடுத்த விண்வெளி வெற்றி. வெற்றிகரமாக விண்ணில் சென்றதுScatSat-1 செயற்கோள்
கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி துறையில் இந்தியா அபாரமான சாதனை செய்து வரும் நிலையில் இன்று காலை 9.12 மணி அளவில் இஸ்ரோ, ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV C-35 ராக்கெட்டை இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.
ScatSat-1 உட்பட எட்டு செயற்கைக்கோள்களுடன் சீறிப் பாய்ந்தது PSLV. எந்த தொழில்நுட்பச் சிக்கலும் இல்லாமல் சீராக நடந்த இன்றிய ராக்கெட், விண்வெளி துறையில் இந்தியா அடுத்த நிலைக்கு சென்றுள்ளதை உறுதி செய்துள்ளது. இதுதான் PSLVன் நீண்ட தூரப் பயணம், ஏனெனில் ScatSat-1 730 கிமீ தூரத்தில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தவுள்ளது.
ScatSat-1 செயற்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வானிலை அறிக்கை, புயல் போன்ற இயற்கை பேரழிவுகளை முன்னரே கணிப்பது போன்றவற்றிற்காக இந்த செயற்கோள் பயன்பட இருக்கிறது. PISAT,PRATHAM என்ற இரு மாணவ செயற்கோள்களையும் கொண்டு செல்கிறது ScatSat-1.
Chennai Today News: Isro’s PSLV-C35 places SCATSAT-1 weather satellite in orbit, mission is on