ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பின் 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ். வருமான வரித்துறை அதிரடி
மத்திய அரசு கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததை அடுத்து அந்த நோட்டுக்களை அனைவரும் வங்கியில் டெபாசிட் செய்தனர். இவ்வாறு டெபாசிட் செய்தவர்களில் 18 லட்சம் பேர்களுக்கு வருமான வரித்துறை அந்த பணம் குறித்து கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்களுக்கு வரும் பதிலை அடுத்தே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் வீட்டில் சேமித்து வைத்திருந்த, பதுக்கி வைத்திருந்த பணம் அனைத்தும் வெளியே வந்தது. இவ்வாறு வெளியேறிய பணம் அனைத்தும் சொந்த கணக்கிலும் பினாமி கணக்கிலும் வங்கியில் டெபாசிட் ஆனது. இவ்வாறு டெபாசிட் ஆன வங்கி கணக்குகளில் சந்தேகத்துக்குரிய வங்கி கணக்குகள் தனியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.