ரூ.500 கோடிக்கும் மேல் வருமானவரி பாக்கி வைத்துள்ள குஜராத் நிறுவனங்கள். பட்டியல் வெளியீடு

income taxகோடிக்கணக்கான ரூபாய் அளவில் வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வருமான வரியை செலுத்தாத மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித்துறை பட்டியலிட்டு அதை இணையதளத்திலும் இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சுமார் 500 கோடி ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரியை மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்கள் வருமாறு:
1. புளு இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் – ரூ. 75.11 கோடி
2. சோமானி சிமெண்ட் – ரூ. 22.47 கோடி
3, ஆப்பிள்டெக் சொலுஷன் –  ரூ. 27.07 கோடி
4. ஜூபிட்டர் பிசினஸ் –  21.31 கோடி
5. ஹிராக் பயோடெக்  – ரூ. 18.54 கோடி
6. பயோ பார்மா ஹெல்த்கேர் –  ரூ. 17.69 கோடி
7. பயான் பெர்ரி அலோய்ஸ் –  ரூ. 17.48 கோடி
8, லக்மிநாராயண் டி தாக்கார்  – ரூ. 12.49 கோடி
9. விராக் டெயிங் பிரிண்டிங் – ரூ. 18.57 கோடி
10. பூனம் இண்டுஸ்டீரிஸ் – ரூ. 15.84 கோடி
11.குன்வார் அஜய் புட் பிரவேட் லிமிட் –  ரூ. 15 கோடி
12. கோல்டுசுஹ் டிரட் இந்தியா –  ரூ. 75. 47 கோடி
13.விக்டோர் கிரிடிட் கன்ஸ்டரக்சர் – ரூ. 13.81 கோடி
14. நோபர் மெர்சண்டிஸ் – ரூ. 11.93 கோடி

முதன் முறையாக வருமான வரித்துறை பொது இணையதளத்தில் வரி கட்டாதவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. நிறுவனங்கள் நிலுவையில் உள்ள வரிகளை கட்டுவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரித்துறை பொது நோட்டீசில், வரிகட்டாதவர்களின் பான் நம்பர் மற்றும் கடைசியாக தெரிவிக்கப்பட்ட முகவரி ஆகியவற்றையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிட்டுள்ளது.

Leave a Reply