முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா? கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ப.சிதம்பரம்
அதிமுக பொதுச்செயலாளராக ஆவதற்கு மக்களின் கருத்தை கேட்டறிய வேண்டிய தேவை இல்லை. அது அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம். ஆனால் தமிழக முதல்வர் பதவி என்பது அதிமுக கட்சியின் பதவி அல்ல. அது மக்கள் கொடுக்கும் பதவி. மக்கள் தங்களை ஆட்சி செய்ய தேர்வு செய்யும் பதவி. அந்த பதவியில் உட்கார ஒருவருக்கு தகுதி இருக்கின்றதா என்ற கேள்வி கேட்க தமிழக மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதே கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும் இன்று தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் It is the right of AIADMK MLAs to elect their leader. It is the right of the people to ask if the leader deserves to be CM என்று பதிவு செய்துள்ளார்.