அதிக பணம் டெபாசிட் செய்த 5100 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

அதிக பணம் டெபாசிட் செய்த 5100 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தபோது கருப்புப்பண முதலைகள் பல வழிகளில் கருப்பை வெள்ளையாக்க முயற்சி செய்தனர். ஒருசிலர் பெரிய தொகையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர். இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் பெரிய தொகை டெபாசிட் செய்த 5100 பேர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்த 5100 பெர்கள் 5400 கோடி ரூபாய் வரை வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும், இந்த பணத்திற்கு உரிய கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், வருமான வரித்துறையின் சோதனையில் இதுவரை 610 கோடி ரூபாய் மதிப்பலான பொருட்கள், 513 கோடி ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் தொடர் நடவடிக்கை காரணமாக பலகோடி ரூபாய் சிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்

Leave a Reply