விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையா? வருமான வரித்துறையினரின் திடுக்கிடும் தகவல்கள்
இளையதளபதி விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தது. அவர் ஐந்து வருடங்கள் முழுமையான முறையான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில், நேற்று இந்த செய்தியை விஜய் மறுத்தார்.
தன்னுடைய ஒவ்வொரு வருமானத்திற்கும் தான் ஒழுங்காக வரி செலுத்தி வருவதாகவும், ஊடகங்கள் பொய்யான தகவலை பரப்பி தனது மனதை புண்படுத்தி வருவதாகவும், அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் கடந்த சில வருடங்களாக வரி ஏய்ப்பு செய்து வந்தது உண்மைதான் என்றும், இதுகுறித்து விளக்குவதற்காக விரைவில் பிரஸ் மீட் ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் வருமான வரித்துறையினர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.