இதை ஏன் கூவத்தூரில் செய்யவில்லை? மத்திய அரசுக்கு ஒரு கேள்வி
பெங்களூர் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் மாநில எம்பிக்களுக்கு கணிசமான அளவில் கவனிக்கப்பட்டதாக ரகசிய தகவல்கள் வந்துள்ள நிலையில் இந்த விடுதியில் வருமானவரித்துறையினர் அதிரடியாக தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போன்ற ஒரு நிலைமைதான் தமிழகத்தில் நடந்தது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது கோடிக்கணக்கில் பணம் கைமாறப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதை கண்டும் காணாமல் இருந்தது. தற்போது பெங்களூரில் ரெய்டு நடத்தியது போல கூவத்தூரிலும் ரெய்டு நடத்தியிருந்தால் பல உண்மைகள் வெளியே வந்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.