ராம்மோகன் ராவை அடுத்து மேலும் ஒரு அதிகாரி வீட்டில் இன்று சோதனை
நேற்று தமிழக தலைமைசெயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் விடிய விடிய சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணம் மற்றும் கட்டிகட்டியாக தங்கம் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய நிலையில் இன்று இன்னொரு ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கின் நிறுவன மேலாண் இயக்குநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகராஜனின் வீட்டில் இருந்து இதுவரை 6 கிலோ தங்கம், 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் அதிகளவு இந்த சோதனையில் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சேகர் ரெட்டி மற்றும் ராம்மோகன் ராவ் வீடுகளில் நடந்த சோதனைக்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் நாகராஜனின் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது