நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு
முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதனின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் சென்னை மேயர் சைதை துரைச்சாமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 9 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், வேம்பார் பட்டியில் உள்ள வீடு, மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், இதுகுறித்த தகவல் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மகன் வீடு மற்றும் அலுவலகங்களிலும், சென்னை அபிராமபுரம், கோவை ஆகிய இடங்களில் உள்ள கீர்த்திலால் என்பவரின் நகைக்கடைகளிலும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.