பாஜகவுக்கு அதிமுக ஆதரவளித்தது ஏன்? ஸ்டாலின் கூறும் காரணம்
நேற்று நடைபெற்ற பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்யும் என்றே முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் அதிமுக எம்பிக்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘நீட், 15வது நிதி ஆணையம், ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு மற்றும் மத ரீதியான அரசியல் என பல பிரச்சனைகள் இருக்கையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மோடி அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்திருப்பது, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான உறவை காட்டுகிறது.
முதல்வரின் உறவினர் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனைக்கான நோக்கம் இப்போது நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். ‘
Support for Modi Govt in #NoConfidence despite NEET, 15th Finance Commission, GST, Hindi imposition and communal politics is further proof of the quid pro quo arrangement between ADMK and BJP. IT raids on Chief Minister Edapadi Palaniswami's family have achieved their objective.
— M.K.Stalin (@mkstalin) July 20, 2018