இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் திடீர் ராஜினாமா
பொதுவாக்கெடுப்பில் தோல்வியடைந்த இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்சி அவர்களும், 8 வருடங்களாக நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜான் கே அவர்களும் ஒரே நாளில் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டு நேற்று அதற்கான பொதுவாக்கெடுப்பு நடந்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் 59.5 சதவீதம் பேர் இந்த சட்டதிருத்தத்துக்கு எதிராக வாக்களித்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்சி ராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல் நியூசிலாந்தின் பிரதமர் ஜான் கே பதவி பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவிற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. எனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்காக ராஜினாமா செய்ததாகவும், இனிமேல் நான், எனது மனைவி புரோனாக் மற்றும் குழந்தைகள் ஸ்டெபானி, மாக்ஸ் ஆகியோருடன் பொழுதை கழிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரே நாளில் இரண்டு நாடுகளின் பிரதமர்கள் ராஜினா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.