இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை. பொதுமக்கள் அதிர்ச்சி

இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை. பொதுமக்கள் அதிர்ச்சி

இத்தாலி நாட்டில் உள்ள கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை வந்து கொண்டு எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற அபாய நிலை இருந்த நிலையில் நேற்று திடீரென வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த எரிமலையின் முகப்பில் இருந்து லாவா எனும் நெருப்பு குழம்பு ஆக்ரோஷமாக வெளிப்பட்டு வழிந்து வருவதால் அந்த பகுதியே நெருப்புக்குழம்பாக உள்ளது. இந்த நெருப்பு குழம்பு வானத்தை நோக்கி செல்வது போன்று இருப்பதாக காடானியா நகரத்தில் வாழும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பாக இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், அந்த பகுதி வழியாக செல்லும் அனைத்து விமான சேவைகளை வழக்கம் போல் இயங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் மலைச் சரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை இத்தாலி அரசு வழங்கி வருவதாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply