ஜப்பான் நாட்டின் டோஷிபா நிறுவனத்தின் பங்குகள் 40% திடீர் சரிவு.

ஜப்பான் நாட்டின் டோஷிபா நிறுவனத்தின் பங்குகள் 40% திடீர் சரிவு.
Toshiba-L
கம்ப்யூட்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், டிவிடி பிளேயர்கள் முதல் பல்வேறு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னோடியாக இருந்த ஜப்பானை சேர்ந்த டோஷிபா நிறுவனம் நடப்பு ஆண்டி 4.5 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் தங்களிடம் பணிபுரியும் சுமார் 7000 ஊழியர்களை விடுவிக்கவுள்ளதாகவும், ஒருசில கிளைநிறுவனங்கள் மூடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக தமது லாபத்தை கூட்டி அறிவித்ததாக இந்த ஆண்டின் முற்பகுதியில் டோஷிபா ஒப்புக்கொண்ட நிலையில், இந்த நிர்வாக சீரமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டோஷிபா இதை தெரிவித்த நிலையில், அதன் பங்குகளின் விலை சந்தையில் சுமார் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply