பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். உச்சகட்ட அதிருப்தியில் ஓபிஎஸ்?

பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். உச்சகட்ட அதிருப்தியில் ஓபிஎஸ்?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விரைவில் தமிழக முதல்வர் பதவியையும் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட அமைச்சர்கள் நாள்தோறும் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து முதல்வர் ஓபிஎஸ். தொடரந்து மெளனம் காத்து வருகிறார். முதல்வர் பதவியை அவர் விட்டுக்கொடுப்பாரா? அல்லது மத்திய அரசுடன் கைகோர்த்து தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? என்பதை சரியாக அறிய முடியாமல் அதிமுக தலைமை உள்ளது.

இதனை அடுத்து நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று போயஸ் கார்டன் அழைத்து, இதுபற்றி விவாதிக்கப்பட்டதாகவும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள வாரிசு பிரச்னை போல, அதிமுக.,விலும் ஏற்பட்டுவிடக்கூடாது என, கடுமையாக, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகவும்கூறப்படுகிறது.

அப்போது ஓபிஎஸ், ‘’ஜெயலலிதா மட்டுமின்றி, சின்னம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்துள்ளேன். ஆனால், என்னைத் திரும்பத் திரும்ப சந்தேகப்படுவது, மிகவும் மன வேதனையாக உள்ளது. எவ்வளவு விசுவாசம் காட்டமுடியுமோ, அந்த அளவுக்கு காட்டிவருகிறேன். என்னைப் புரிந்துகொள்ளுங்கள்,’’ என ஓ.பன்னீர்செல்வம் வருத்தப்பட்டுள்ளார். மேலும், பொது வாழ்வில் இருந்தேகூட விலகிக் கொள்ளவும் தயாராக இருக்கின்றேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் உச்சகட்ட அதிருப்தியில் கூறியதாக தெரிகிறது.

Leave a Reply