மோடி பிரதமராவதால் நாட்டை விட்டே வெளியேறும் பிரபல நடிகர். பெரும் பரபரப்பு.

kamaal

விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கொடுக்காவிட்டால், நாட்டை விட்டே வெளியேறுவேன் என கமல் ஆரம்பித்த வைத்த டயலாக்கை அதன்பின்னர் நிறைய பேர் பின்பற்ற தொடங்கிவிட்டனர். தேர்தலுக்கு முன்னர் மோடி பிரதமராகிவிட்டால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என பிரபல பாலிவுட் நடிகர் காமால் ஆர்.கான் சவான் விட்டார்.

நேற்று தேர்தல் முடிவுகள் காலை முதல் வரத்தொடங்கியவுடன், பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதோடு, மோடி பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்று செய்திகள் வெளிவரத்தொடங்கியவுடன், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நாட்டை விட்டு வெளியேறுவதாக நேற்று கமால் ஆர்.கான் தெரித்தார். நாட்டை விட்டு வெளியேறும் முன் டெல்லி விமானநிலையத்தில் இருந்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த கமால் ஆர்.கான், மோடி பிரதமராகும் சூழ்நிலை வந்துவிட்டதால், நாட்டை விட்டு வெளியேறுகிறேன். மோடியின் ஆட்சியில் இந்தியாவில் இனி சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இவரை போலவே பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி பிரதமரானால் கர்நாடகாவை விட்டே வெளியேறுவேன் என முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடா தேர்தல் பிரச்சாரத்தின்போது சவால் விட்டார். ஆனால் தற்போது அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். நடிகர் கமால்கானைப்போல தேவகவுடா ரோஷத்துடன் கர்நாடகாவை விட்டு வெளியேறுவாரா? என ஊடகங்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளது.

Leave a Reply