அதிமுகவில் ஜே.கே.ரித்தீஷ். கனிமொழி தலைமையில் உருவபொம்மை எதிர்ப்பு.

10இராமநாதபுரம் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜே.கே. ரித்தீஷ் இன்று சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஜே.கே.ரித்தீஷுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர் அதிமுகவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மு.க.அழகிரிக்கு ஆதரவு கொடுத்து வந்ததால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தபோது, திடீரென அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

இன்று மதியம் சென்னையில் முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து, அதிமுகவில் சந்தித்து தன்னை இணைத்துகொண்டவுடன் ரித்தீஷுக்கு ஜெயல்லிதா அதிமுக கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இந்நிலையில் ஜே.கே. ரித்திஷ் அ.தி.மு.க.வில் சேர்ந்ததை கண்டித்து, ராமேஸ்வரம் தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி, தலைமையில் ரித்திஷ்யின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உருவ பொம்மை எரிவதை அணைத்து திமுகவினரை விரட்டினர். இந்த சம்பவத்தால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply