பிரபல ஹாங்காங் மற்றும் ஹாலிவுட் ஆக்சன் நடிகர் ஜாக்கிசான் அவர்களின் மகன் ஜெய்ஸி சான், போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபல ஆக்சன் நடிகர் ஜாக்கி சான் மகன் ஜெய்ஸி சான், தன்னுடைய வீட்டில் 100 கிராம்போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த போதை மருந்துகளை அவர் பயன்படுத்தியதோடு தனது நண்பர்களுக்கும் விநியோகம் செய்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருடைய நண்பர் தைவான் நாட்டு நடிகர் “கை கோ” (Kai Ko,) அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட ஜெய்ஸிசான் கூறியதாவது, “நான் போதை பொருட்களை எனக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே வைத்திருந்தேன். யாருக்கும் இதை விற்பனை செய்யவில்லை. நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். என்னை ஹாங்காங் மக்கள் மன்னிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.