அஜித் படத்தை வெளியிடும் தியேட்டரை கொளுத்துவேன். கன்னட நடிகரின் திமிர்ப்பேச்சு
அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ‘சத்யதேவ்’ என்ற பெயரில் இன்று கர்நாடகா முழுவதும் வெளியாகிறது.
ஆனால் இந்த படத்தை வெளியிட கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிறமொழி டப்பிங் படங்களால் கன்னட மொழி திரைப்படங்களில் வசூல் பாதிப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்ப்பையும் மீறி இந்த படம் பெங்களூர் உள்பட பல நகரங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கன்னட நடிகர் ஜகேஷ் என்பவர் கூறியபோது, ”சத்யதேவ்’ படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்றும், மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் இம்மாதம் 11-ஆம் தேதி இதற்காக பேரணி ஒன்றும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.