கொல்கத்தா டி20 போட்டியின் டிக்கெட்டில் டால்மியா படம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா சமீபத்தில் திடீரென மரணம்அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் செய்த சேவையை பாராட்டும் வகையிலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற இருக்கும் டி20 போட்டிக்கான டிக்கெட்டில் டால்மியா படத்தை அச்சிட்டு விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தொடருக்கான டிக்கெட்டுகளை ஒரே விதமாகத்தான் அச்சிட்டு விற்பனை செய்ய முடிவு செய்திருந்த நிலையில் திடீரென டால்மியா மரணமடைந்ததால் அவருக்கு சிறப்பான அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது படத்தை அச்சிட முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க இணை செயலாளர் சுபி்ர் கங்குலி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.